யோக சாதனைகளின் மேலேறி வரும் யோகிகளுக்கு யோக சித்திகளை அள்ளித்தரும் தேவியின் பெயர் சாம்பவி . சம்புவாகிய சிவனின் மனைவி என்பதால் இந்த திருநாமம். ஸ்ரீ வித்யா யோக மார்க்கத்தில் சாம்பவி தேவதையின் உபாசனை முறைகளை சாம்பவி வித்யா என்பார்கள்.
ஸ்ரீ வித்தையின் நிறைவு கட்டத்தில் விழிப்பு, கனவு, உறக்கம் என்ற நிலைகளை கடந்து சித்தாகாச பெருவெளியில் உலவும் அனுபவங்கள் கிடைக்கும். அந்த அனுபவங்களில் ஒன்றான சாம்பவி அனுபவத்தை இந்நூல் சிறப்பாக விளக்குகிறது.
சாதாரண மனிதர் போல் வாழ்ந்த அமரகவி சித்தேஸ்வர ஸ்வாமிகளின் அனுபவ பதிவுகள் நிறைந்த இந்நூல் யோகத்தில் ஈடுபடுவோருக்கு மிகுந்த பயனளிக்கும்.
சுபா - நன்றி தினமலர்
No comments:
Post a Comment