Friday 28 August 2015

மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்கை வரலாறு தினமலர் நூல் விமர்சனம்





மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்கை வரலாறு, அவரது ஞானம் மற்றும் யோக சித்தி மகிமைகளை சிறப்பாக அறிமுகபடுத்தும் இந்நூல் தியான சமாதி முறைகளை பற்றிய விளக்கங்களையும்  வழங்குகிறது. நூலின் முதல் இயலில் பிரம்மேந்திரரின் வாழ்கை சரிதை  கண்கவர் ஓவியங்களுடன் வழங்கபட்டு உள்ளது.  இரண்டவது இயலில் பிரம்மேந்திரரின் யோக சித்திகள், மூன்றவது  இயலில் இயற்றிய கீர்த்தனைகள் அவரது சமகாலத்தில் வாழ்ந்த மகான்கள், அவர் சஞ்சரித்த இடங்கள், பிரம்மேந்திரர் மற்றும் அமரகவி சித்தேஸ்வரரின் யோக அட்டவணைகள், சித்தர்களின் ஜீவ சமாதியின் நோக்கம், சித்தர்களின் இருப்பிடங்கள், அட்டவணைகள், ஆகியவை கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன.   
- செல்வம்  நன்றி - தினமலர் 18.08.2015


No comments:

Post a Comment